தென்கொரிய இளம் நடிகை கிம் மி-சூ திடீர் மரணம்..!

தென் கொரிய நடிகை கிம் மி-சூ தனது 29-ஆவது வயதில் திடீரென மரணமடைந்தார்.

Update: 2022-01-07 07:36 GMT
கோப்புப்படம்
சியோல்,

டிஸ்னி+ தொடரான ​​"ஸ்னோ டிராப்" மற்றும் நெட்பிக்ஸ் இன் "ஹெல்பாண்ட்" ஆகியவற்றில் தோன்றிய தென் கொரிய நடிகை கிம் மி-சூ தனது 29-வது வயதில் மரணமடைந்தார்.

வளர்ந்து வரும் மாடலும்,தொலைக்காட்சி நட்சத்திரமான கிம் மி-சூ-  ஜனவரி 5-ம் தேதி திடீரென மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அவரது ஏஜென்சியான லேண்ட்ஸ்கேப் என்டர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த திடீர்  செய்தியால் அவரது குடும்பம் தற்போது மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்த நிலையில், அவர் மரணம் குறித்து சமூக வளைதலங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால், இத்தகைய செயலை தவிர்க்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும் செய்திகள்