எகிப்து பஸ் விபத்து பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

எகிப்தின் சினாய் மாகணத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2022-01-08 17:30 GMT
எகிப்து,

வடகிழக்கு எகிப்தில் உள்ள சினாய் பெனின்சுலா சர்வதேச நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 16 பேர் இறந்துள்ளனர். மேலும் 18-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். சாலையில் பனிமூட்டமாக இருந்ததன் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் மற்றொரு சிறிய பஸ்ஸின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

13 ஆம்புலன்சுகள் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையின் மோசமான நிலை காரணமாகவும் சாலை விதிமுறைகள் கட்டுக்கோப்பாக இல்லாத காரணத்தாலும் எகிப்தில் தினசரி சாலை விபத்துகள் சாதாரணமாகி விட்டன.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக எகிப்து நாடு புது சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், சாலைகளை சரிசெய்தல் ஆகியவற்றின் மூலமாக சாலை போக்குவரத்தை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது. 

2019-2020 ஆண்டில் சாலை விபத்துகள் மூலம் ஏற்படும் மரணங்கள் 44 சதவீதம் குறைந்துள்ளதாக எகிப்தின் திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்