இசைக்கருவிகளை தீயிட்டு கொளுத்திய தலீபான்கள்; இசைக்கலைஞர் கண்ணீர்..!

இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு எரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Update: 2022-01-16 11:11 GMT
காபூல்,

தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்களையும் தடை விதித்து வருகின்றனர். பெண்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பல்வேறு சமூக, கலாச்சார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக இசையும் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

வாகனங்களில் செல்வோர் இசை கேட்கவும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசை வாத்தியங்களை ஒலிக்கவும் தலிபான்கள்  தடை விதித்திருந்தனர். இந்நிலையில் தற்போது உள்ளூர் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு எரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் பாக்தியா மாகாணத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இசையமையாளர் ஒருவரிடம் இருந்து இசைக்கருவி பிடுங்கப்பட்டு, நடுரோட்டில் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதை கண்டு அந்த இசையமைப்பாளர் அழுகிறார். ஆனால் தலிபான்கள் அவரின் அவல நிலையை கண்டு சிரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்