கத்தாரில் பிறந்து 3 வாரமே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

கத்தாரில் பிறந்து 3 வாரமே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளது.

Update: 2022-01-17 09:11 GMT
கத்தார், 

உலக நாடுகளை கதி கலங்க வைத்து வரும் கொரோனா பல லட்சம் உயிர்களை இதுவரை காவு வாங்கியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு எதிரான மிகப்பெரிய  ஆயுதமாக தடுப்பூசி விளங்குவதால் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  எனினும் , உலக அளவில் தொற்று பாதிப்பு பல அலைகளாக பரவ் வருகிறது. 

இந்த நிலையில், கத்தாரில் கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறந்து 3 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்து இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தொற்றுக்கு பலியான குழந்தைக்கு வேறு எந்தவிதமான மருத்துவ அறிகுறிகளும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கத்தாரில் கொரோனா தொற்று பாதித்து பலியாகும் இரண்டாவது குழந்தை இது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யுனிசெப் அளித்த தகவலின்படி, உலகளவில் கொரோனா வைரசால் 3.5 மில்லியன் இறப்புகளில் 0.4 சதவீதம் பேர் 20 வயதுக்குட்பட்டவர்களில் ஏற்பட்டுள்ளது. அதில், 9 வயது மற்றும் அதற்கு குறைவான வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்