அமெரிக்காவில் தடுமாறும் தடுப்பூசி திட்டம்..! போதிய மக்கள் ஆதரவு இல்லை

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு போதிய மக்கள் ஆதரவு இல்லாததால், தடுப்பூசி இயக்கம் மந்தமாக உள்ளது.

Update: 2022-01-26 22:57 GMT
கோப்புப்படம்
வாஷிங்டன், 

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு பொதுமக்களிடம் போதுமான ஆதரவு இல்லை என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அங்கு இதுவரை முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களில் 40 சதவீதத்தினர்தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

டிசம்பர் தொடக்கத்தில் ஒரு நாளில் 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டனர். இது கடந்த வாரத்தில் சரிபாதியாக குறைந்து விட்டது. தி அசோஷியேட்டட் பிரஸ், என்.ஓ.ஆர்.சி. சென்டர் கூட்டாக நடத்திய ஆய்வில், அமெரிக்கர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை விட ஆரம்ப தடுப்பூசிகளைத்தான் அத்தியாவசியமானதாக கருதுகின்றனர் என தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக அமெரிக்க தடுப்பூசி இயக்கம் மந்தமாக உள்ளது. தடுப்பூசி போடத்தொடங்கி 13 மாதங்களுக்கு மேலாகியும் அமெரிக்கர்களில் 63 சதவீதத்தினர் (21 கோடி பேர்) முழுமையாக தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்