ஆஸ்திரேலியாவில் 16-17 வயதுடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி

ஆஸ்திரேலியாவில் இதுவரை 18 வயதை கடந்த 93 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Update: 2022-01-28 02:37 GMT
கோப்புப்படம்
மெல்பர்ன்,

ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு இதுவரை 18 வயதை கடந்த 93 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் 35 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டில்  16-17 வயதுடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது. 16-17 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு பூஸ்டராகப் பயன்படுத்த பைசரின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா ஏற்கெனவே இந்த மாத தொடக்கத்திலிருந்து 5-11 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. 

16-17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு எப்போது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்பது குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்