தலீபான்கள் ஆட்சியில் 100க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் படுகொலை!

ஆப்கானிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது;

Update:2022-02-01 15:31 IST
ஜெனீவா,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியை பிடித்த தலீபான்கள் அதற்கு முந்தைய அரசின் கீழ் பணியாற்றிய 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளை கொலை செய்துள்ளனர். 

அதில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பலர் அடங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற மரணங்களில் மூன்றில் 2 பங்கு மரணங்கள் தலீபான்களால் சட்ட விரோதமாக நிகழ்த்தப்பட்ட கொலைகள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்