உக்ரைனுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஆதரவு

உக்ரைனை பாதுகாக்க போராடி வரும் ராணுவ வீரர்கள் மற்றும் அந்த நாட்டு மக்களுடன் தான் ஒன்றாக துணை நிற்பதாக கூறினார்.

Update: 2022-03-22 23:51 GMT
image credit: Reuters
பெல்மோபன்,  

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கதே ஆகிய இருவரும் கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று அவர்கள் பெலீஸ் நாட்டுக்கு சென்றனர்.

அங்கு தலைநகர் பெல்மோபனில் உள்ள இங்கிலாந்து ராணுவ பயிற்சி மையத்துக்கு இளவரசர் வில்லியம் நேரில் சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் ரஷியாவின் உக்கிரமான போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மரியாதை செலுத்தினார்.

அங்கு பேசிய அவர், உக்ரைனை பாதுகாக்க போராடி வரும் ராணுவ வீரர்கள் மற்றும் அந்த நாட்டு மக்களுடன் தான் ஒன்றாக துணை நிற்பதாக கூறினார்.

மேலும் ஜனநாயகத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பை கண்டிக்கும் நாடுகளுடன் பெலீஸ் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்