வடகொரிய ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க தயார்" - தென் கொரியா திடீர் அறிவிப்பு

வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது.;

Update:2022-03-25 21:51 IST
கோப்புப்படம்
சியோல்,

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பிறகு தென்கொரியா ஏவுகணை பயிற்சியை மேற்கொண்டது. வடகொரியா மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது. 

இந்த நிலையில், குறுகிய தூரம் சென்று இலக்கை அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் நீண்ட இலக்குகளை குறிவைத்து அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை தென் கொரியாவும் நிகழ்த்தியுள்ளது. 

இதனை தொடர்ந்து, வடகொரியாவின் ராணுவ நகர்வுகளை துல்லியமாக கணித்துவரும் தென்கொரியா, வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது. 

மேலும் செய்திகள்