உக்ரைன் - ரஷியா போரை கண்டித்து தண்ணீருக்குள் இறங்கி பெண்கள் நூதன போராட்டம்

ரஷியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் உள்ள குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-04-08 12:42 IST
image courtesy: AP Photo/Mindaugas Kulbis
வில்னியஸ்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 43 நாட்களாகி விட்டன. இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் உள்ள ரஷிய தூதரகத்தின் முன்பு சிவப்பு நிறத்தில் உள்ள குளத்தில் இறங்கி பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் ரஷியப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட கீவ் பகுதியில் 410 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இரத்தத்தை குறிக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் உள்ள குளத்தில் சில பெண்கள் இறங்கி போரட்டம் நடத்தினர்.

அப்போது போரில் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் இறந்து கிடப்பது போல் நடித்து ரஷியாவிற்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்