துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி: கோமாவில் இருந்து மீண்ட பயங்கரவாதி ஆஸ்திரேலிய கோர்ட்டில் ஆஜர்

நவீத் அக்ரம் மீது கொலை, பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட 59 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.;

Update:2025-12-19 02:58 IST

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஹனுக்கா பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான யூதர்கள் கூடியிருந்தனர். அவர்களை குறிவைத்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 16 பேர் பலியானார்கள். முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகன் என்பதும், அவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதும் உறுதியானது.

முன்னதாக போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் தந்தை சாஜித் அக்ரம் உயிரிழந்தார். கோமா நிலைக்கு சென்ற மகன் நவீத் அக்ரமுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கோமாவில் இருந்து மீண்ட நிலையில் நவீத் அக்ரம் மீது கொலை, பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட 59 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்காக போலீசார் அவரை காணொலிக்காட்சி மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்