“பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” - பாகிஸ்தானுக்கு இந்தியா, அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

Update: 2022-04-13 02:31 GMT
வாஷிங்டன், 

வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனையும், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டினையும், இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கும், வெளியறவு மந்திரி ஜெய்சங்கரும் சந்தித்து 2 பிளஸ் 2 பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் முடிவில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், “பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்தப்பகுதியும், பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு, உடனடியாக நீடித்த மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2 பிளஸ் 2 பேச்சு வார்த்தையின்போது பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஷபாஸ் ஷெரீப் பிரதமராகி உள்ள நிலையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் செய்திகள்