கடும் ஊரடங்கு விதிக்கப்படும் என அச்சம்; அத்தியாவசிய பொருட்களை போட்டி போட்டு வாங்கும் மக்கள்..!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால் சீனாவில் சில இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-04-25 09:59 GMT
Photo Credit: AFP
பெய்ஜிங்,

சீனாவின் உகான் நகரம்தான் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை உலகுக்கு வழங்கியது. இன்றைக்கு அதே சீனா ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா அலையில் சிக்கி உள்ளது.
சீனாவின் பொருளாதார தலைநகர் என்ற பெருமைக்குரிய ஷாங்காய் நகரில்தான் அறிகுறியற்ற கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 51-பேர் பலியாகி உள்ளனர். இந்த நகரம் கொரோனா தொற்றின் மையமாக உள்ளது. 

பீஜிங் நகரில் 10 நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவியதைத் தொடர்ந்து நேரடி வகுப்புகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளன.  பெய்ஜிங் மத்திய பகுதியான ஷயோங் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனையை சீனா நடத்தி வருகிறது.   இதற்காக வணிக வளாகங்கள், அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தங்களின் சளி மாதிரிகளை அளித்து வருகின்றனர். 

இந்த பரிசோதனையில் யாராவது ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படாலும் ஷாங்காய் நகரில் அமல்படுத்தப்பட்டதைப் போல மிகக் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சமும் 35 லட்சம் பேர் வசிக்கும் ஷயோங் மாவட்ட மக்கள் மத்தியில்  ஏற்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களை வாங்க சூப்பர் மார்க்கெட்டுகள் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடக்கின்றனர். 

மேலும் செய்திகள்