எலான் மஸ்க் வசமாகிறது டுவிட்டர்? 43 பில்லியன் டாலருக்கு விற்க ஒப்புதல் என தகவல்

டுவிட்டர் நிறுவனத்தை 43 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்க ஒப்புதல் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-04-25 13:51 GMT
வாஷிங்டன்,

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முயன்று வருகிறார். அவர் டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்துள்ளார்.

மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் அறிவித்துள்ளார். முன்னதாக, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை  வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை மறுத்த எலான் மஸ்க், தற்போது 4 பில்லியன் டாலருக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார். 

இந்த நிலையில்,  எலான் மஸ்கின் ஆஃபரை டுவிட்டர் நிர்வாகம் ஏற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.  பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்க டாலர் என்ற கணக்கில் வழங்க நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.  இந்த வாரத்திற்குள் இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

எலான் மஸ்க் அளித்த முன்மொழிவு தொடர்பாக விவாதிக்க இரு தரப்பும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்ததாகவும் இதில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விவாதிக்க வேண்டிய சில விஷயங்கள் இன்னும் இருப்பதால், டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் உறுதியாக செல்லும் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்