சவப்பெட்டிகளை எரித்து போராட்டம் -இலங்கையில் நிலவும் பதற்றம்

இலங்கையில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சவப்பெட்டிகளை எரித்து போராட்டம் நடைபெற்றதால், பதற்றம் ஏற்பட்டது.

Update: 2022-04-26 09:52 GMT
கொழும்பு, 

இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. 

கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர், பிரதமர் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகக்கோரி நடைபெற்றுவரும் இந்த போராட்டம் தொடர்ந்து இரண்டு வாரத்தை கடந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அதிபருக்கும், அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சவப்பெட்டிகளை எரித்து போராட்டம் நடைபெற்றதால், பதற்றம் ஏற்பட்டது. கொழும்புவில் சவப்பெட்டிகளை ஊர்வலமாக தூக்கிச்சென்று எதிர்ப்பை தெரிவித்த மக்கள், சவப்பெட்டிகளை தீயிட்டு எரித்தும் முழக்கங்களை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்