இலங்கை போராட்டத்தில் இணைந்த வெளிநாட்டினர்... மக்களுடன் நடனமாடி அரசுக்கு எதிர்ப்பு
இலங்கையில் நடைபெற்ற போராட்டத்தில் வெளிநாட்டினர் மக்களுடன் நடனமாடி, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.;
கொழும்பு,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாடு தழுவிய போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
மேலும், தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டங்கள், 300-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மலையகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், வெளிநாட்டினர் இரண்டு பேர், மலையக மக்களுடன் இணைந்து நடனமாடி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.