யூதர்கள் குறித்து சர்ச்சை கருத்து: ரஷியாவுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம்

யூதர்கள் குறித்து சர்ச்சை கருத்தினை தெரிவித்த ரஷியாவுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-03 03:23 GMT
Image Courtesy: AFP
டெல் அவிவ், 

உக்ரைன் மீது ரஷிய படைகள் 2 மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் நிலையில், 2-ம் உலகப்போரில் ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் யூதர்களை தாக்கியது போல ரஷியா தங்களை தாக்குவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அண்மையில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக பேசிய ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், “உக்ரைனில் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட சில பிரமுகர்கள் யுதர்களாக இருந்தாலும் கூட அங்கு நாஜி கூற்றுகள் இருக்கும். ஏனெனில் ஹிட்லருக்கும் யூத இரத்தம் இருந்தது. மிகவும் தீவிரமான யூத எதிர்ப்பாளர்கள் பொதுவாக யூதர்கள்தான் என்று புத்திசாலியான யூத மக்கள் கூறுகிறார்கள்” என்றார். யூதர்கள் குறித்த அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ரஷியாவுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவு மந்திரி யாயிர் லாபிட் கூறுகையில், “ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவின் கருத்துக்கள் மன்னிக்க முடியாத மற்றும் மூர்க்கத்தனமான அறிக்கை மற்றும் ஒரு பயங்கரமான வரலாற்று பிழை. யூதர்களே யூதருக்கு எதிர்ப்பு என்று யூதர்களுக்கு எதிராக குற்றம் சாட்டுவதாகும்” என கூறினார்.

மேலும் செய்திகள்