சொகுசு மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் எங்கு பதுங்கி உள்ளனர்...?

மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி, ஒரு மகன் மற்றும் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை திருகோணமலை கடற்படைத் தளத்தை வந்தடைந்தனர்.

Update: 2022-05-10 08:49 GMT
Image Courtesy: AFP/Ishara S Kodikara

கொழும்பு

இலங்கை முழுவதும் கொந்தளிப்பாக காணப்படும் சூழலில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறினார். பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் சொகுசு வீட்டை விட்டு அவர் வெளியேறினார்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி, ஒரு மகன் மற்றும் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை திருகோணமலை கடற்படைத் தளத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

திருகோணமலை கடற்படை முகாமிற்கு இரண்டு ஹெலிகாப்டர்கள்  இன்று காலை வந்து சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர்களில் இருந்து ஏராளமான பைகள் இறக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் அவை அங்கிருந்து சென்றுள்ளன.

அதற்காக திருகோணமலை இராணுவ முகாமிற்கு விரைவில் வரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்பு போலீஸ்  மைதானத்தில் இருந்து ஹெலிகாபடர்  ஒன்று சிலரை ஏற்றிக்கொண்டு அவசரமாக செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ  ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இது நாமல் ராஜபக்சவின் உறவினர்களாக இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். 

பாராளுமன்ற எம்.பி நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று காலை கொழும்பில் இருந்து திருகோண கடற்படை தளத்திற்கு தப்பிச் சென்றனர் என ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.


மேலும் செய்திகள்