இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்

இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-05-11 06:44 GMT
கொழும்பு,

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் வெகுண்டெழுந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து பிரதமர் பொறுப்பில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினர். இதையடுத்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள்  தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.  

மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த  சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பேருந்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றன. போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. மேலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தஞ்சம் அடைந்துள்ள கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனையை சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெட்ரோல்,டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்