யூஏஇ அதிபர் மறைவு - அரசு, தனியார் நிறுவனங்கள் 3 நாட்கள் மூட உத்தரவு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலிஃபா பின் ஷயத் அல் நயான், உடல் நலக்குறைவால் காலமானார்.

Update: 2022-05-14 02:10 GMT
கோப்புப்படம்
அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலிஃபா பின் ஷயத் அல் நயான், உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌தாக அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. 

அதிபரின் மறைவுக்கு,  நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் 3 நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு 30 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து ஷேக் கலிஃபா பின் ஷயத் அல் நயான் அதிபராக இருந்து வந்த‌து குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகள்