இந்தியா ஏற்றுமதிக்கு விதித்த தடை எதிரொலி: உலக அளவில் உச்சம் தொட்டது கோதுமை விலை

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, உலக அளவில் கோதுமை விலை உச்சம் தொட்டுள்ளது.

Update: 2022-05-16 11:29 GMT
கோப்புப்படம்
பாரிஸ், 

கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்நாட்டில் கோதுமை விலை அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. 

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக கருங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோதுமை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் உக்ரைனிலிருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் உள்ளது.

இதனால் உக்ரைனிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் நாடுகள் இந்தியாவிடமிருந்து கோதுமை வாங்குவதற்கு முன்வந்துள்ளன. இதனால் கடந்த ஏப்ரலில் அதிகபட்ச அளவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் விளைவாக உள்நாட்டில் கோதுமை விலை அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

கோதுமை உற்பத்தியை வெப்ப அலை பாதித்ததால் அதன் ஏற்றுமதியை இந்தியா தடை செய்துள்ளநிலையில், கோதுமையின் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

முக்கிய கோதுமை ஏற்றுமதியாளரான உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பை அடுத்து ஏற்கனவே அதிகமாக இருந்த கோதுமையின் விலை, ஐரோப்பிய சந்தை திறக்கப்பட்டவுடன் ஒரு டன்னுக்கு 435 யூரோக்கள் ($453) உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்