பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக பலி!

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் ஏற்கனவே விசாரணை கைதியாக உள்ளவர் என்பதும் தெரிய வந்துள்ளது.;

Update:2022-07-24 16:01 IST

மணிலா,

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் ஏற்கனவே விசாரணை கைதியாக போலீஸ் காவலில் இருந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்