நைஜீரியா மசூதியில் தற்கொலை படை தாக்குதல் - 5 பேர் உயிரிழப்பு
மசூதியில் நடந்த தாக்குதலில் 35 பேர் படுகாயமடைந்தனர்.;
அபுஜா,
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மைதுகுரி நகரில் உள்ள மசூதியில் நேற்று மாலை நேர தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர், உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்காத நிலையில், அந்நாட்டு காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.