மியான்மர் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி 5 பேர் பலி - 30 பேர் காயம்
மியான்மர் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பஸ் கவிந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.;
கோப்புப்படம்
யாங்கூன்,
மியான்மர் நாட்டில் யாங்கூன்-மண்டலே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் கவிழ்ந்து 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:30 மணியளவில் யாங்கூன்-மண்டலே நெடுஞ்சாலையில் மைல்போஸ்ட் 167க்கு அருகே பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களும் அடங்குவர் என்றும் காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் ஆபத்தான நிலையில் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.