66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்
ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம் உள்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.;
வாஷிங்டன்,
66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை கூறியதாவது:-
அமெரிக்க நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாக கருதப்படும் 35 ஐ.நா அல்லாத குழுக்கள் மற்றும் 31 ஐ.நா அமைப்புகளுக்கு நிதி வழங்கு வதையும், அவற்றுடன் தொடர்பு கொள்வதையும் நிறுத்தும் படி அனைத்து அரசு நிறு வனங்களுக்கும் இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஐ.நா. பருவநிலை ஒப்பந்தம் உள்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில்டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். இந்த நடவடிக்கை அமெ ரிக்காவின் தேசிய நலன்களுக்கு இனி சேவை செய்யாத அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தது.
ஐ.நா பருவநிலை ஒப்பந்தம், இந்தியாவும் பிரான்சும் இணைந்து வழிநடத்தும் தூய்மையான எரிசக்தி முன்னெடுப்பான சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், பருவ நிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு உள்பட 66 அமைப்பு களில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளது.