21 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவு - மெட்டா நிறுவனம் தகவல்

பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட வேண்டிய தொகை பற்றிய விவரங்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Update: 2023-05-27 09:10 GMT

வாஷிங்டன்,

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டது. பொருளாதார சரிவை ஈடுகட்டுவதற்கும், நிறுவன மறுகட்டமைப்பு மேற்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன்படி சுமார் 21 ஆயிரம் ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் மெட்டா நிறுவனம் 2023 காலாண்டு முடிவுகளை பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற அறிக்கையில் சமர்பித்து இருக்கிறது. இதில் மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட வேண்டிய தொகை பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி மெட்டா நிறுவனத்தின் ஊழியர்களுக்கான பணிநீக்க ஊதியம் மற்றும் தனிப்பட்ட செவீனங்களுக்கு மட்டும் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் கோடி) செலவாகும் என்று அறிவித்து இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்