தைவானில் இன்று அதிபர் தேர்தல்

தைவானின் தேர்வு முடிவுகள் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறது.

Update: 2024-01-13 00:15 GMT

தைபே,

சீனாவால் உரிமை கொண்டாடப்பட்டு வரும் தைவானில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

அந்தப் பகுதியில் அதிபரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்காக 8-ஆவது முறையாக நடைபெறும் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

டிபிபி கட்சியின் லாய் சிங்-டே, கேஎம்டி கட்சியின் ஹூ யூ-ஈ, டிபிபி கட்சியின் கோ வென்- ஜே ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தல் தைவானில் சீனாவின் எதிர்காலக் கட்டுப்பாட்டை முடிவு செய்யும் என்பதால் இதன் முடிவுகள் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்