பிரேசிலை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்... பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியது

பிரேசிலில் இந்த ஆண்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியுள்ளது.

Update: 2024-05-22 06:56 GMT

கோப்புப்படம் 

ரியோ டி ஜெனிரோ,

பிரேசிலில் இதுவரை இல்லாத வகையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியுள்ளது என்று பிரேசில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய தரவுகளின்படி, பிரேசிலில் 51 லட்சத்து 45 ஆயிரத்து 295 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுவரை டெங்குவால் 2,899 பேர் உயிரிழந்துள்ளனர். வரலாறு காணாத வகையில் பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், பிரேசிலின் சில அண்டை நாடுகளிலும் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் டெங்கு வைரசின் பல செரோடைப்களின் சுழற்சி போன்ற காரணிகளே டெங்கு காய்ச்சல் அதிகரிப்புக்கு காரணம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்