உக்ரைன் போர் நிறுத்த திட்டத்தை ரஷியா ஏற்றுக்கொண்டுள்ளது; அமெரிக்க ஜனாதிபதி
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 383வது நாளாக போர் நீடித்து வருகிறது.;
வாஷிங்டன்,
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 383வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்த திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உக்ரைன் - ரஷியா போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதகு பதில் அளித்த டொனால்டு டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேசி வருகிறோம். போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷியா ஏற்றுக்கொண்டுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புரிந்துகொள்ளவில்லை. அது எனக்கு ஏமாற்றம் தான்’ என்றார்.