பறக்கும் விமானத்தில் சிறுநீர் கழித்ததாக சகோதரர்கள் சண்டை; விமானம் அவசர தரையிறக்கம்

பறக்கும் விமானத்தில் சிறுநீர் கழித்ததாக சகோதரர்கள் சண்டையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.;

Update:2022-06-03 10:48 IST

கரிரீஸ்

கிரீஸ் நோக்கி பறந்த விமானத்தில், நடுவானில் போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்ட சகோதரர்களை போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த ஆல்பி மற்றும் கென்னத் சகோதர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் மற்றொருவர் மீது சிறுநீர் கழித்ததாக கூறி சண்டையிட்டுக் கொண்டனர். சகோதரர்களின் சண்டையில் விமானம் கொர்பு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

சகோதரர்களுக்கு 50 ஆயிரம் யூரோ அபராதமும், ஜெட் 2 விமானங்களில் பயணிக்க வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. சக பயணி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்