சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஜப்பான்-அமெரிக்கா இடையே கூட்டுப்போர் பயிற்சி

சீனாவின் நடவடிக்கைகள் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.;

Update:2025-12-13 22:10 IST

டோக்கியோ,

தைவான் விவகாரத்தில் தலையிட்ட ஜப்பானுக்கு சீனா சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து ஜப்பான் போர் விமானம் மீது சீன ராணுவம் ரேடார் தாக்குதல் நடத்தியது. அதேபோல் மேற்கு பிராந்தியம் அருகே நடைபெற்ற ரஷிய கூட்டுப்போர் பயிற்சியின்போது இரு நாடுகளின் போர் விமானங்களும் ஜப்பான் எல்லைக்குள் நுழைந்தன. ஆனால் அந்த விமானங்களை ஜப்பான் ராணுவம் விரட்டியடித்தது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் மேற்கு பிராந்தியம் அருகே சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவுடன் இணைந்து ஜப்பான் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது அமெரிக்காவுக்கு சொந்தமான பி-52 என்ற குண்டுவீச்சு விமானங்களும், எப்-35, எப்-15 ஆகிய ஜப்பானிய போர் விமானங்களும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுகுறித்து சீனாவின் நடவடிக்கைகள் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் வான்வெளி மற்றும் நீர்நிலைகளில் கண்காணிப்பு தொடரும் என ஜப்பான் ராணுவ மந்திரி ஷின்ஜிரோ கொய்சுமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்