ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
காபூல்,
இதுகுறித்து நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் 173 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஆக.18-ல் மேற்கு ஆப்கானிஸ்தானின் 423 கி.மீ தொலைவில் உள்ள காபூலில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. காபூலில் 4.5 நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டது.