ஆப்பிரிக்காவில் உக்ரைன் தூதரகம் திறக்க 8 நாடுகள் சம்மதம்

8 ஆப்பிரிக்க நாடுகள் உக்ரைனுக்கு தூதரகங்களை திறக்க சம்மதம் தெரிவித்துள்ளன

Update: 2023-05-30 22:10 GMT

கோப்புப்படம்

கீவ்,

ஆப்பிரிக்க நாடுகளில் புதிய தூதரகங்களை திறப்பது மற்றும் வர்த்தக உறவுகள் மூலம் தனது இருப்பை அதிகரிப்பது என உக்ரைன் முடிவு செய்தது. அதன்படி அங்கு 10 புதிய தூதரகங்களை திறக்க முடிவு செய்துள்ளதாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார். அதன் ஒரு பகுதியாக உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த சுற்றுப்பயணங்களை முடித்த பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், `இதுவரை 8 ஆப்பிரிக்க நாடுகள் உக்ரைனுக்கு தூதரகங்களை திறக்க சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்காக வெளியுறவு அமைச்சக பட்ஜெட்டில் சில மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதில் தேவையான முடிவை அதிபர் எடுப்பார்' என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்