புவி வெப்பமயமாதலை கண்காணிக்க புதிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் நாசா

புவி வெப்பமயமாதலை கண்காணிக்க புதிய செயற்கைகோள்களை நாசா விண்ணில் செலுத்த உள்ளது.

Update: 2023-08-16 19:51 GMT

கோப்புப்படம்

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பூமி வெப்பமயமாதல் குறித்தான ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்படி உலகின் பனிக்கட்டி கண்டங்களான ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவில் தனது சோதனை மையங்களை நிறுவி வெப்ப இழப்பு குறித்து கண்காணித்து வருகிறது.

இந்தநிலையில் அதனின் மேம்பட்ட நடவடிக்கையாக துருவ பிரதேசங்கள் மேல் செயற்கைகோள்கள் ஏவி துல்லிய கணிப்புகளை பெற உள்ளது. இதற்காக தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராக்கெட் லேப் உடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளது.

ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவில் இருந்து புவி எந்த அளவு தனது வெப்பத்தை இழக்கிறது என்பதற்கான புரிதலுக்கு இது உதவ இருக்கிறது. இதற்காக 2 கியூப்சாட் வகை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துகிறது. இதனால் கடல் பனி இழப்பு, பனிக்கட்டி உருகுதல் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை குறித்து தெளிவான கணிப்புகளும், காலநிலை மாற்றம் குறித்தும் அறிய உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்