ஓமன்: மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் சாா்பில் கண்கவர் யோகா நிகழ்ச்சி
ஓமனில் இந்திய தூதரகம் சாா்பில் கண்கவர் யோகா நிகழ்ச்சியை நடத்தப்பட்டது.;
Image Courtesy: ANI
மஸ்கட்,
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஐ.நா சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த வருடம் 75வது சுதந்திர ஆண்டு விழா கொண்டாட்டம், ஓராண்டுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் அதனையொட்டி யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் உள்ள முக்கியமான எழுபத்தைந்து இடங்களில் யோகா தினத்தின் போது பல தரப்பு மக்களும் கூட்டாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், யோகா தினத்தன்று பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இணைய வழியில் தொடர் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி 70 நாடுகளில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்கி கூட்டு யோகா பயிற்சி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓமன் தலைநகா் மஸ்கட்டில் இந்திய தூதரகம் சாா்பில் கண்கவா் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.