கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோ உடனான சந்திப்பை தொடர்ந்து அந்நாட்டு பிரதமரை பிரதமர் மோடி சந்தித்தார்.;

Update:2023-08-25 15:29 IST

ஏதென்ஸ்,

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தென் ஆப்பிரிக்காவில், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பன்னாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது கிரீஸ் நாட்டுற்கு சென்றடைந்தார். கிரீஸ் நாட்டு தலைநகர் ஏதென்ஸ்க்கு விமானம் மூலம் வந்த பிரதமர் மோடியை அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜார்ஜ் ஜெராபெட்ரிட்டிஸ் வரவேற்றார். இதனையடுத்து கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசை பிரதமர் மோடி சந்தித்தார். அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோ உடனான சந்திப்பை தொடர்ந்து அந்நாட்டு பிரதமரை பிரதமர் மோடி சந்தித்தார்.

அதன் பிறகு , கிரீஸ் நாட்டு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்து இருந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு அவருக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து, இந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்