ஜப்பானுக்கு தொழில்நுட்ப பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை: சீனா அறிவிப்பு

ஜப்பானுக்கு தொழில்நுட்ப பொருட்கள் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்துள்ளது.;

Update:2026-01-08 04:23 IST

பீஜிங்,

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். இவருடைய பதவியேற்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வாழ்த்து தெரிவித்ததுடன் டோக்கியோவுக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார்.

இருபெரும் தலைவர்களும் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக இணைவோம் என்று அறிக்கையை வெளியிட்டனர். பின்னர் தமது நாட்டிற்கு எதிராக செயல்பட்டால் போர் நடவடிக்கை எடுக்கப்படும் என சனே தகைச்சி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான உறவு கசந்து வர்த்தக உறவு சரியத் தொடங்கியது. அதன் ஒருபகுதியாக சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் ராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னணு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்