இலங்கையின் தற்போதைய நிலைக்கு ரஷியாவே காரணம் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

இலங்கையின் தற்போதைய நிலைக்கு ரஷியாவே காரணம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.;

Update:2022-07-15 04:23 IST

கோப்புப்படம்

கீவ்,

இலங்கையில் தற்போது நீடித்து வரும் பொருளாதார பிரச்சினைக்கு உக்ரைன் மீதான ரஷியாவின் போரே காரணம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் பணவீக்கத்தை ரஷியா உருவாக்கி வருகிறது. கருங்கடல் பகுதியினை ரஷியா முற்றுகையிட்டுள்ளதால் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. அந்த வகையில், இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளுக்கு உக்ரைன் மீதான ரஷியாவின் போரும் ஒரு காரணம். உணவு மற்றும் எரிபொருள்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடுதான் ஒரு சமூக புரட்சிக்கு காரணமானது. இது எப்போது, எப்படி முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்