இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 7 பேர் பலி

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.;

Update:2023-06-25 20:31 IST

லாகூர்,

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் பெஷாவர் நோக்கி இன்று அதிகாலை 2 பஸ்கள் சென்றுகொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் சிந்து மாகாணத்தின் மெஹ்ரன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 42 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதிவேகமாக பஸ்கள் இயக்கப்பட்டதே இந்த விபத்துக்கான காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்