முதல் மாத சம்பளத்தை தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிய பெண்; நன்றி கூறிய நபர்! பணத்தை திருப்பித்தர கண்ணீர் மல்க வீடியோ

முதல் மாத சம்பளத்தை தன் தாயாருக்கு இணைய வழி பணப்பரிமாற்றம் செய்துள்ளார்.

Update: 2022-09-04 06:44 GMT

மலேசியா,

மலேசியாவில் பஹதா பிஸ்தாரி என்ற இளம்பெண் ஒருவர் தான் வேலை பார்த்து ஈட்டிய முதல் மாத சம்பளத்தை தன் தாயாருக்கு கொடுப்பதற்காக அவருடைய வங்கிக்கணக்குக்கு இணைய வழி பணப்பரிமாற்றம் செய்துள்ளார்.

அதன் பின், தன் தாயாரிடம் பணம் அனுப்பிய ரசீதை காண்பிக்க சொன்னார். அவருடைய தாயார் அப்படி எதுவும் இல்லை. பணம் இன்னும் வரவில்லை என்று தெரிவித்தார்.

அதன்பின், அந்த பெண் வங்கி பணப்பரிவர்த்தனை விவரங்களை பரிசோதித்ததில், வேறொருவருக்கு பணம் சென்றது தெரிய வந்தது.

தற்செயலாக நடந்த கவனக்குறைவால் அக்கவுண்ட் எண் மாறிவிட்டது. இதனால் அவர் தனது முதல் மாத சம்பளத்தை ஒரு அந்நியருக்கு மாற்றிவிட்டார்.

இது தெரிய வரவே அந்த நபரின் போன் நம்பரை கொண்டு அவரை தொடர்பு கொண்டார். அப்போது தான் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த நபர் கூறும்போது, இந்த பணத்தை நன்கொடையாக அளித்ததாக நினைத்துக் கொள்ளுமாறு பெண்ணிடம் கூறியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த பெண் அழுதுகொண்டே நடந்தவற்றை வீடியோவாக டிக்டாக்கில் பதிவேற்றினார். இதை பலரும் பார்த்து பரிதாபப்பட்டனர்.

அதன் பின் சுவாரசிய சம்பவம் அரங்கேறியது. அந்த பெண்ணை மிரட்டிய நபர் அடுத்த நாள் பணத்தை திருப்பி அனுப்பிவிட்டார். இதை சற்றும் எதிர்பராத அந்த பெண், அந்த நபர் தன்னை பயப்படுத்துவதற்காக சற்றுநேரம் முன் வெறுமனே அவர் நாடகமாடியதை தெரிந்து கொண்டார். அவருக்கு நன்றி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்