உலக ஆதார நடனம்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் இந்த உலகம் இயங்குகிறது. கடலில் எப்போதும் ஓயாது அலையடித்துக் கொண்டே இருக்கிறது.

Update: 2017-01-17 00:45 GMT
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் இந்த உலகம் இயங்குகிறது. கடலில் எப்போதும் ஓயாது அலையடித்துக் கொண்டே இருக்கிறது. நெருப்பு தன் ஜுவாலையான நாக்கை சுழற்றி எரிகிறது. காற்று தென்றலாய், புயலாய் வலம் வருகிறது. வானம் இடியாய், மின்னலாய், மழையாய் வர்ணஜாலம் காட்டுகிறது. பூமிப்பந்து தங்கு தடை இல்லாமல் சூரியனை வலம் வந்து இரவையும், பகலையும் உண்டாக்குகிறது. இந்த இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது சிவ பெருமானின் திருநடனம் தான். ஈசன் அசைந்தால் உலகமே அசைகிறது. அவன் அசைவை நிறுத்தி விட்டால் சிறிய அணு கூட அசையும் சக்தியை இழந்து விடும். மனிதன் கருவில் இருக்கும் போதே தொடங்கும் இருதய இயக்கம், அதன் இயக்கத்தை நிறுத்தியதும் மனிதன் இறப்பதைப் போல, நடராஜர் தன் நடனத்தை நிறுத்தினால், உலகம் அழிந்து போகும்.


ஆண்டுக்கு ஆறு அபிஷேகம்

தில்லை நடராஜப்பெருமானுக்கு, ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்யப்படுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

மேலும் செய்திகள்