அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

ஏராளமான பக்தர்கள் தெப்பக்குளத்தின் படிக்கட்டிலும், குளத்தின் மதில் சுவர் மீதும் அமர்ந்து தெப்ப உற்சவத்தை கண்டுகளித்தனர்.

Update: 2024-04-26 07:07 GMT

திருப்பூர் மாவட்டம் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் உற்சவமூர்த்தி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நடந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.

நேற்று இரவு அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மின் விளக்குகள் ஒளிர, சந்திரசேகர் - அம்பாள் சிறப்பு அலங்கார தோற்றத்தில் தெப்ப குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தெப்பக்குளத்தின் படிக்கட்டிலும், குளத்தின் மதில் சுவர் மீதும் அமர்ந்து இந்த உற்சவத்தை கண்டுகளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்