குணவானை தேர்வு செய்த சாவித்திரி

மத்ர தேசத்தை ஆட்சி செய்து வந்தவன் அஸ்வபதி. இந்த மன்னனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்தது.

Update: 2017-03-14 01:15 GMT
த்ர தேசத்தை ஆட்சி செய்து வந்தவன் அஸ்வபதி. இந்த மன்னனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்தது. குழந்தை வரம் கிடைக்க 10 ஆயிரம் யாகங்கள் செய்தான். சாவித்திரி தேவதையை நினைத்து 18 ஆண்டுகள் கடும் தவம் இருந்தான். அவனது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சாவித்திரி தேவதை, மன்னனுக்கு குழந்தை வரம் அருளியது. இதையடுத்து அந்த மன்னனின் மனைவி கர்ப்பம் தரித்து, பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, தனக்கு வரம் அளித்த தேவதையின் பெயரான சாவித்திரி என்ற பெயரையே சூட்டினான் அஸ்வபதி மன்னன். சாவித்திரி தைரியம், பொறுமை, கடமை, சமயோசிதம் ஆகியவற்றை ஒருங்கே பெற்றுத் திகழ்ந்தாள். அவளைத் தெய்வப் பிறவி என்று கருதியதால், யாரும் அவளை திருமணம் செய்ய முன்வரவில்லை.

இதனால் தன் மகளையே தனக்கானவனை தேர்வு செய்யும்படி அனுப்பிவைத்தார் அஸ்வபதி. பல நாடுகளில் சுற்றித்திரிந்த சாவித்திரி, இறுதியாக காட்டில் வாழ்ந்து வந்த சத்தியவானைக் கண்டாள். சத்தியவானின் தந்தை, தனது அரசாட்சியை இழந்து காட்டிற்கு துரத்தப்பட்டவர். கண் தெரியாத தன் தாய் தந்தையை அன்போடு கவனித்து வந்த சத்தியவானின் குணம், சாவித்திரியை மையல் கொள்ளச் செய்தது. சத்தியவான் இன்னும் ஓராண்டுதான் உயிர்வாழ்வான் என்று தெரிந்தும், அவனை சாவித்திரி தேர்வு செய்ய இதுவே முக்கிய காரணம்.

மேலும் செய்திகள்