ஆன்மிகம்
பூர்வீகச் சொத்துகள் யாருக்கு கிடைக்கும்?

ஒருவர் மேஷ லக்னத்தில் பிறந்து, அவரது லக்னத்திற்கு நான்காமிடத்திற்கு அதிபதியான சந்திரனும்,
ஐந்தாமிடத்திற்கு அதிபதியான சூரியனும் பரிவர்த்தனையாகி இருந்தால் அவர்களுக்கு வம்சாவழி சொத்துகளும், பூர்வீகச் சொத்துகளும் தானாகவே வந்து சேரும். தெய்வ பலம் மிக்கவர்களாக விளங்குவர். அரசு வழித் தொடர்புகளால் ஆதாயம் கிட்டும்.

எதை  எப்படிப்  பெறுவது?

    தாயை நேசித்து அன்பைப் பெறலாம்
    கடவுளை நேசித்து மோட்சத்தைப் பெறலாம்
    நண்பனை நேசித்து நட்பைப் பெறலாம்
    உறவினரை நேசித்து மகிழ்ச்சியைப் பெறலாம்
    எதிரியை நேசித்து அமைதி பெறலாம்
    ஆதரவற்றோரை நேசித்து பாச உணர்வைப் பெறலாம்
    குழந்தையை நேசித்து பாச உணர்வைப் பெறலாம்
    வாழ்க்கையை நேசி¢த்து வளம் பெறலாம்.

பக்தி  பல  வகை

    சிரவணம்     -     இறைவனின் குணங்களைக் காதாரக் கேட்டல்
    கீர்த்தனம்     -     இறைவனின் குணங்களை வாயாரப் பாடுதல்
    ஸ்ரமணம்     -     இறைவனை தியானித்தல்
    பாதசேவணம்     -     இறைவனின் திருவுருவத்தை பூஜித்தல்
    அர்ச்சனை     -     இறைவனை பூக்களாலும், இலைகளாலும் அர்ச்சித்தல்
    வந்தனம்     -     இறைவனின் திருவடியை விழுந்து வணங்குதல்
    தாஸ்யம்     -     பகவானுக்குத் தன்னை அடிமையாக்குதல்
    சக்யம்     -     பகவானைத் தன் உற்ற சக நண்பனாகக் கொள்தல்
    ஆத்ம நிவேதனம்    -     பகவானுக்குத் தன்னை முழுமையாக சமர்ப்பித்தல்