ஆன்மிகம்
ஆன்மிகத் துளிகள்

கடவுளைப் பற்றிய ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக் கும். கண் தெரியாதவர்கள் யானையைப் பார்த்தது போன்றது அது.
அனுபவம்

கடவுளைப் பற்றிய ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக் கும். கண் தெரியாதவர்கள் யானையைப் பார்த்தது போன்றது அது. யானையின்காலைத் தொட்டவர், யானை ‘தூண்’ போல்இருப்பதாகவும், காதைத் தொட்டவர், யானை ‘முறம்’ போல் இருப்பதாகவும் கூறுவர். உண்மையில் யாரும் யானையை முழுமையாக அறியவில்லை. அதுபோலவே கடவுளைப் பற்றிய அனுபவமும்.

–ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஆத்மா

அகந்தை என்பது தோன்றி மறையக்கூடியது. எனவே அது நிலையற்றது. ஆனால் ஆத்மா நிலையானது. நாம் உண்மையில் ஆத்மாவாக இருந்தாலும், அகந்தையோடு இணையப் பார்க்கிறோம். இறைவனைத் தேடினால் அகந்தையானது ஓட்டம் பிடிக்கும். அப்போது எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமே. நமது நோக்கம் ஞான வழியில் அமைந்தால், உலகமே கடவுளாகத் தெரியும்.

–ரமணர்.

முயற்சி

நம்மிடம் உள்ள நம்பிக்கையை மறுபடியும் விழித் தெழச்செய்ய வேண்டும். அதன் பின்னர் நமது நாட்டினர் முன்பு நிற்கும் துயரங்கள் அனைத்தையும் நாமே மெல்ல மெல்லத் தீர்த்து விடலாம். தூய்மையை நாடும் போராட்டத்தில் அழிய வேண்டி வந்தால் அழிந்து விடுங்கள். தளர்வுறாதீர்கள். அமுதம் கிடைக்க வில்லை என்பதற்காக, வி‌ஷத்தை உண்ண வேண்டிய அவசியம் இல்லை.

–விவேகானந்தர்.