ஆன்மிகம்
வாரம் ஒரு அதிசயம்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ளது இலஞ்சி. இங்கு இலஞ்சி குமாரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அருளும் முருகப்பெருமானை, அருணகிரி நாதர் தனது திருப்புகழில் ‘வரதராஜப் பெருமாள்’ என்று அழைக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ளது இலஞ்சி. இங்கு இலஞ்சி குமாரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அருளும் முருகப்பெருமானை, அருணகிரி நாதர் தனது திருப்புகழில் ‘வரதராஜப் பெருமாள்’ என்று அழைக்கிறார். இந்த ஆலயத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளின் சொரூபம் என்று முருகப்பெருமான் பறைசாற்றியதாக தல வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே முருகப்பெருமானை, வரதராஜப் பெருமாள் என்று அழைத்துள்ளார் அருணகிரிநாதர். வேறு எந்த ஆலயத்திலும் முருகப்பெருமானை, பெருமாளின் பெயர் கொண்டு அழைப்பதில்லை என்பதால், இந்த ஆலயம் சற்றே வேறுபட்டு நிற்கிறது. இந்த ஆலயத்தில் மாதுளம் பழ முத்துக்களைக் கொண்டு வேல், சேவல் செய்து வைக்கும் நேர்த்திக்கடன் பிரசித்திபெற்றது.