ஆன்மிகம்
கைரேகை அற்புதங்கள் ராகு தசை தரும் நன்மைகள்

ராகு- கேது கிரகங்களைச் ‘சாயா கிரகங்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும். ‘சாயா’ என்றால் ‘நிழல்’ என்று பொருள்.
 தசா கால வரிசையில் ராகுவுக்கு 18 ஆண்டுகளும், கேதுவுக்கு 7 ஆண்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற கிரகங்களுக்கு இல்லாத சில சிறப்பு அம்சங்கள், இந்த இரு கிரகங்களுக்கும் உண்டு. சாதாரணமாக இவர்கள் பாவ கிரகங்கள் என்றாலும், சுபக் கிரகங் களுடன் சேர்க்கை பெற்று, 3,6,9,10,11 ஆகிய இடங்களில் இருக்கும் போது, ஜாதகருக்கு சுப பலன்களைக் கொடுப்பார்கள்.

இந்த இரு கிரகங்களும் எப்போதும் பின் நோக்கியே நகருவார்கள். ராகு- கேதுவுக்கு, சர்ப்பங்கள்தான் தேவதை. ராகுவுக்கு சுப்பிரமணியரையும், கேதுவுக்கு விநாயகரையும் வழிபடுவது நல்லது. பொதுவாக ராகு, மற்ற கிரகங்கள் போலவும், மற்ற கிரகங்களை விட அதிக மாகவும் நற்பலன்களை வாரி வழங்குவார். குறிப்பாக இவரது தசா காலத்தில் இந்தச் சிறப்பு உண்டாவது உறுதி. பலம் பெற்ற ராகு, ஒரு ஆடவருக்கு பெண்கள் மூலம் சுகம், செல்வம் இரண்டையும் தருவார்.

வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இவருடைய சுப பலன் கைகொடுத்து உதவும். ஒருவருக்கு உடலில் எலும்பு உறுதியாக இருக்க வேண்டுமானால், அந்த ஜாதகரின் ஜாதகத்தில் ராகு வலுவுடன் அமைந்திருக்க வேண்டும்.
இனி கைரேகைப்படி ராகுவைப் பற்றி அறியலாம். மனிதனின் கையில் ராகு மேடு, புத்தி ரேகைக்கு அடியில், சந்திரமேடு, செவ்வாய் மேடு, சுக்ர மேடு சுற்றியிருந்து, விதிரேகை இந்த ராகு மேட்டின் ஊடே சென்று சனி மேட்டை அடைகிறது. ராகு மேடு, எப்போதும் திடீர் சம்பவங்களைக் குறிப்பிடுகிறது.

காலையில் சாதாரணமாக இருக்கும் ஒருவன், மாலையில் கோடீஸ்வரன். இப்படி திடீர் அதிர்ஷ்டத்தை எதிர்பாராமல் கிடைக்கச் செய்பவர் ராகு. இளம் வயதில் ராகு தசை நடைபெற்றால், படிப்பில் தடையை உண்டாக்குவார். வெளிநாடு சென்று பிரபல கம்பெனிகளில் வேலைபார்த்து அதிக பொருள் சேர்க்கும் யோகம் உண்டாகும். கணவனை இழந்த பெண் சேர்க்கையால், அதிக பொருள் சம்பாதிக்கும் யோகத்தையும் ராகு கொடுப்பார்.