திருவக்கரை முருகன்

வக்ரன் என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலம் ‘வக்கரை’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள்.

Update: 2018-01-23 07:21 GMT
திருவக்கரை என்ற இடத்தில் வடிவாம்பிகை சமேத சந்திரசேகரர் ஆலயம் இருக்கிறது. வக்ரன் என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலம் ‘வக்கரை’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். மூலவர் மூன்று முக லிங்கமாக இருப்பது சிறப்பு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள், இங்கே கல்லாக மாறி இருப்பதை காண முடியும். இந்த சிவன் கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் பிரசித்தி பெற்றவராக திகழ்கிறார். இவர் பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப்பெருமானாக, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை உள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற தலம் இதுவாகும். அந்த திருப்புகழைப் பாடி, இத்தல முருகனை வணங்கினால், நினைத்தது நிறைவேறும். திண்டிவனத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக, புதுச்சேரி செல்லும் சாலையில் இருக்கிறது திருவக்கரை திருத்தலம். 

மேலும் செய்திகள்