புத்த துறவிகள் வாழ்ந்த இடம்

சித்ரதுர்காவில் இருந்து வடகிழக்கு பகுதி நோக்கி 4 கிலோமீட்டர் தூரம் சென்றால் சந்திரவள்ளி என்ற இடம் உள்ளது.

Update: 2018-07-18 10:09 GMT
தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் இங்கு  கண்டுபிடிக்கப்பட்ட பானைகள், கிண்ணங்கள், கழிவுநீர் கால்வாய்கள், செங்கல்கள், கற்களின் படங்களும், சதவகானா, ஒய்சாலா, விஜயநகர் ஆட்சி காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்களும் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு மனிதர்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

மேலும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அகஸ்டர் சீசஸ் காலத்தைய ரோமன் நாணயங் களும், சீன நாணயங்களும் கண்டறியப்பட்டு உள்ளன.

சந்திரவள்ளியில் உள்ள மலைகளில் குகைகளும், கோவில்களும் அதிகளவில் உள்ளன. அங்குள்ள குகைகளில் ஒரு காலத்தில் புத்த துறவிகள் வாழ்ந்ததாக கண்டறியப்பட்டு உள்ளது.

அந்த குகைகளை குடியிருப்புகள், தியான அறைகள், பார்வையாளர்கள் அரங்கங்களாக அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

அந்த பழமைவாய்ந்த குகைகள் 80 அடி ஆழம் கொண்டவை என்பதால், அங்கு செல்ல விரும்புபவர்கள் டார்ச் லைட் மற்றும் மெழுகுவர்த்தியை கையில் எடுத்து செல்வது நல்லது. 

மேலும் செய்திகள்