நரசிங்கமங்கலம் அய்யனார் கோவில் தேரோட்டம்

தேரோட்டத்தைத் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.;

Update:2025-06-25 13:56 IST

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, நரசிங்கமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள கூத்த பெருமாள் பாலசாஸ்தா சன்னாசி அய்யனார் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. கிராம மக்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்